பண்டிதர்
மயில்வாகனனார்

பண்டிதர் மயில்வாகனனார்

ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 25.01.1919 இல் பிறந்தார்.
வித்துவான் சுப்பையாப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப்புலவர், கலாநிதி கு சிவப்ரகாசம் போன்ற தமிழறிஞர்களிடமும், யாழ்ப்பாணம் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியிலும் கல்விகற்றவர். 
மதுரைத்தமிழ்சங்கம், யாழ்ப்பாணம் ஆரியபாசா அபிவிருத்திச்சங்கம் ஆகிய இரண்டிலும் இரட்டைப் பண்டிதர் பட்டத்தைப்பெற்றவர் ஆசிரியர் அதிபர் சொற்பொழிவாளர் கவிஞர் எழுத்தாளர் எனப் பல்வேறு தளங்களில் தமிழ்ப்பணியாற்றியவர்

ஈழத்திருநாட்டில் பல்வேறுபாகங்களிலும் தமிழ்வளர்க்கும் சங்கங்ளை உருவாக்கித் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.
தலபுராணம், மும்மணிமாலை, திருவூஞ்சல் அந்தாதி ஆகிய தமிழ் இலக்கியவடிவங்களைத் தந்துள்ளார்.
குழந்தைப்பாடல்கள், தமிழ்மொழிப்பாடநூல்கள் பலவற்றை எழுதியவர். 
பண்டிதர் மயில்வாகனனாரின் தமிழ்ப்படைப்புக்களையும் அவரது பணியையும் தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள அறிஞர்கள் பலரும் போற்றியும் பாராட்டியுமுள்ளனர்.

இந்த நீண்ட வரிசையிலிருந்து சில துளிகள்…

கல்வி நூல் வெளியீட்டு நிறுவனமான எமது கு.வி.அச்சகத்தின் வெளியீடுகளுட் பெரும்பாலானவை பண்டிதர் மயில்வாகனம் அவர்களின் சிந்தனைக் கருவூலத்தில் உருவானவை. தொடக்கக்கல்வி பெறுவோர்க்கும் உயர்நிலைக்கல்வி பெறுவோர்க்குமான மொழித்திறன் பயிற்சிகள் மற்றும் எமது துணைநூல் வரிசைகள், சைவசமயம், சுற்றாடற்கல்விப் பாடநூல்வரிசை என்பனவெல்லாம் அவர் கைவண்ணத்தில் மலர்ந்தவை. அவர் கல்வியுலகிற்கு அளப்பரிய சேவை புரிந்துள்ளார்.

யாழ்ப்பாணம்.கு.வி.அச்சகம்,
புத்தகசாலை முதல்வர் கு.வி.அமிர்தலிங்கதுரைஅவர்கள்

பண்டிதர் பற்றி 1பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா

«ஈழத்து மரபுவழித் தமிழ்ப் பலமை பற்றி ஆராய்வோர் பண்டிதர் அவர்களின் விசுவேசர் புராணத்தைக் குறிப்பிடாமல் ஆய்வு செய்ய முடியாது»

பண்டிதர் பற்றி 2பேராசிரியர் அ.சண்முகதாஸ்

பண்டிதர் மயில்வாகனம் அவர்கள் தலபுராணம், மும்மணிமாலை, திருவூஞ்சல், அந்தாதி ஆகிய இலக்கிய வடிவங்களைக் கொண்ட ஆக்கங்களைத் தந்துள்ளார். அந்தாதி, காயத்திரி மந்திரம் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். குழந்தைப்பாடல்கள் உட்படப் பல பாக்கள் புனைந்த பாவலர் மாணவர் கட்டுரைகளுடன் தமிழ் மொழிப்பாடநூல்கள் எழுதிய சிறந்த பேச்சாளர். இவை அவர் சாதித்தனவற்றுக்கு வேண்டிய சான்றுகளாகும்.

பண்டிதர் பற்றி 3தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம்,
தமிழ்நாடு

“இனிய அன்புக்குரிய பண்டிதர் க. மயில்வாகனம் அவர்கள் நல்ல தமிழறிஞர். நுண்ணி நூல் பல கற்றவர். திருஞானசம்பந்தர் அருள்வாக்குப்படி கற்றல், கேட்டல், உடையார், பெரியர் போன்றவர். இவருடன் உரையாடல் நிகழ்த்துவது சிந்தைக்கும், செவிக்கும் இன்பமாக அமையும். பழகுதற்கு இனிய நட்பினர்;.”

மூதறிஞருள் ஒருவராகிய செந்தமிழ்ச் செல்வர் பண்டிதர் க.மயில்வாகனம் அவர்கள் சிறந்த பொற்பொழிவாளர். 1300 செய்யுள்கள் கொண்ட விசுவேசர் புராணத்தை இயற்றியவர்.விசுவேசர் மும்மணிமாலை, ஊஞ்சல் நூல்கள் என்ற வகையில், பத்துக்கு மேற்பட்ட கவிதை நூல்களை ஆக்கிய பெருமைக்குரியவர். காயத்திரிமந்திரம், செந்தமிழ்க்கட்டுரைகள், சங்கநூற் செஞ்சொல் ஓவியங்கள் போன்றவசன நூல்கள் பலவற்றை அவர்ஆக்கியவர்.
கலாநிதி ப.கோபாலகிருஷ்ணன்