பண்டிதர்
மயில்வாகனனார்

(1919 – 2008)

பண்டிதர் மயில்வாகனனார் அவர்கள் மரபுநெறிதவறாது செந்தமிழால் பாடியுள்ள ஆயிரக்கணக்கான செய்யுள்கள் தமிழ்த்தாய்க்கு அணிசேர்க்கும்அணிகலன்களாகும்.

இப்பாயிரங்கள் இன்று தமிழ்மொழியில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஆய்வுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

இவர் இலக்கியத்  துறையிலும் சமயத்  துறையிலும் பல சிறந்த ஆக்கங்கள் படைத்துள்ளார்.
இவற்றுள் 1300 செய்யுள்களை கொண்ட விசுவேசர் புராணமானது மிக முக்கிய ஆக்கமாகும்.